Friday, September 18, 2020

பஞ்சதந்திரக் கதைகள் – 5) அசம்ரெஷிய காரியத்துவம்

 பஞ்சதந்திரக் கதைகள் 5) அசம்ரெஷிய காரியத்துவம்

(எந்த காரியத்தையும் ஆராயாமல் செய்தல்)
  

பாசம்
(மூலம்)
 
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
 
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
 
பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் யாரும்
அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் யாரும்
அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான் நெடுஞ்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
 
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலியவன் ஆனால்
பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் உடற்
கட்டழகு திறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திறந்திருக்கும் இளையவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
 
இன்று நாளை அவனும்கூட மாறலாம்  அவன்
இரவில் தூங்கி பகலில்கூட வாழலாம்
கன்று கண்ட தாயைப் போல ஆகலாம் அன்பு
காதல் பாசம் அவனும்கூட காணலாம்
காதல் பாசம் அவனும்கூட காணலாம்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
 
 
கீரியும் குழந்தையும்
(மெட்டுக்குப் பாட்டு)
  
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
தனது பிள்ளை போலதானே நினைத்தவன் தானே
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
 
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
தனது பிள்ளை போலதானே நினைத்தவன் தானே
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
 
கீரிப் பிள்ளை வீட்டைச் சுற்றி ஓடுமாம் யாரும்
அன்பை தானே காட்டி விட்டால் ஆடுமாம்
கீரிப் பிள்ளை வீட்டைச் சுற்றி ஓடுமாம் யாரும்
அன்பை தானே காட்டி விட்டால் ஆடுமாம்
தன் பிள்ளை வீட்டில் விட்டு செல்லுவான் அந்த
கீரி தனை துணை இருக்க சொல்லுவான்
கீரி தனை துணை இருக்க சொல்லுவான்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
 
அருகில்வந்த பாம்பைக் கொன்ற கீரியவன் ஆனால்
எஜமானின் கோபத்திற்குப் பலியவன்
அவசரத்தில் அறிவுதனை இழந்தவன் நல்
நீதிதனை எல்லோர்க்கும் சொன்னவன்
நீதிதனை எல்லோர்க்கும் சொன்னவன்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
 
இதனைக் கண்டு நீயும்கூட மாறணும் அவன்
கோபம் கொண்டு இழந்ததையும் நினைக்கணும்
அசம் ரெஷிய காரியத் துவம் புரியணும் என்றும்
யோசித்து எந்த செயலுந்தானே செய்யணும்
யோசித்து எந்த செயலுந்தானே செய்யணும்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
தனது பிள்ளை போலதானே நினைத்தவன் தானே
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
 
 
-     வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு
-     Vellore Author P. Rajan Babu




பஞ்சதந்திரக் கதைகள் – 4) லப்தகாணி

 பஞ்சதந்திரக் கதைகள் 4) லப்தகாணி

(கையில் கிடைத்ததை அழித்தல்)
 
 
முரடன் முத்து
(மூலம்)
 
ஓ.....  ஓ.....  ஒ......  ஓ.....
 
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு
 
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு
 
கனிவாக பாக்குது கண்ணு
கன்னத்தை கிள்ளுது ஒண்ணு
 
கனிவாக பாக்குது கண்ணு
கன்னத்தை கிள்ளுது ஒண்ணு
காத்துக்கும் பாதைவிடாமல் விளையாட சொல்லுது
இங்கே ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில் ஆசையும் உண்டு
 
இங்கே ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில் ஆசையும் உண்டு
 
இன்னும் உன் எண்ணம் எங்கே செல்லுது
 
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு
 
அனுமானைக் கேட்டது போதும்
தனியாக வாழ்ந்தது போதும்
அனுமானைக் கேட்டது போதும்
தனியாக வாழ்ந்தது போதும்
 
கல்யாண ராமனைக் கேளு கதையாக சொல்லுவார்
ஆசைக்கு எல்லையும் இல்லை
காதலிலே பாவம் இல்லை
 
ஆசைக்கு எல்லையும் இல்லை
காதலிலே பாவம் இல்லை
அஞ்சும் உன்நெஞ்சம் எங்கே செல்லுது
 
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு
 
 
குருவியும் குரங்கும்
(மெட்டுக்குப் பாட்டு)
  
ஓ.....  ஓ.....  ஒ......  ஓ.....
 
ஆலமரக் கிளையும் பாரு
குருவிங்க கூட்டையும் பாரு
தாயும் சேயும் வாழ்வதப் பாரு
குருவிக்கு கூடே வீடு
 
ஆலமரக் கிளையும் பாரு
குருவிங்க கூட்டையும் பாரு
தாயும் சேயும் வாழ்வதப் பாரு
குருவிக்கு கூடே வீடு
 
குரங்கும்தான் வாழுது அங்கு
மரத்தையோ தாவுது நன்கு
 
குருவிக்கு இருக்குது கூடு
குரங்குக்கு மரந்தான் வீடு
குரங்குந்தான் விடில்லாம மழையாலே நனையுது
இதையும் ஒரு குருவியும் கண்டு
எண்ணத்தில் ஏளனம் கொண்டு
 
தனக்கும் ஒரு கூடும் உண்டு
கட்டுவதில் தேர்ச்சியும் உண்டு
என்றே தான் குரங்கைக் கேலி செய்த்து
 
ஆலமரக் கிளையும் பாரு
குருவிங்க கூட்டையும் பாரு
தாயும் சேயும் வாழ்வதப் பாரு
குருவிக்கு கூடே வீடு
 
கோபந்தான் கொண்டது குரங்கும்
கூட்டினைத்தான் கலைத்தது அதுவும்
கோபந்தான் கொண்டது குரங்கும்
கூட்டினைத்தான் கலைத்தது அதுவும்
 
கலைந்த அதுகூட்டினைக் கேளு நீதியாக சொல்லும்பார்
அடைந்ததைக் காக்கவும் இல்லை
கேலியால் ஏற்படும் தொல்லை
 
அடைந்ததைக் காக்கவும் இல்லை
கேலியால் ஏற்படும் தொல்லை
நீதியாம் லப்தகாணி இங்கே விளங்குது
 
ஆலமரக் கிளையும் பாரு
குருவிங்க கூட்டையும் பாரு
தாயும் சேயும் தவிப்பத பாரு
குருவிக்கு கூடே வீடு
 
 
-     வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு
-     Vellore Author P. Rajan Babu




பஞ்சதந்திரக் கதைகள் – 3) சந்தி விக்ரகம்

பஞ்சதந்திரக் கதைகள் 3) சந்தி விக்ரகம்

(சுஹ்ருதபேதம்)
(பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்)
  

அலிபாபாவும் 40 திருடர்களும்
(மூலம்)
 
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
 
ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்கப் பாருங்க
 
ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்கப் பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் கொட்டுங்க
 
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் கொட்டுங்க  ஓ...ஓஓ.....ஓ
 
அங்கொண்ணு இளிக்குது ஆந்தைபோல் முழிக்குது
அங்கொண்ணு இளிக்குது ஆந்தைபோல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
 
இங்கொண்ணு என்னைப் பாத்து கண் ஜாடை பண்ணுது
 
இங்கொண்ணு என்னைப் பாத்து கண் ஜாடை பண்ணுது
ஏமாளிப் பொண்ணுஇன்னு ஏதேதோ எண்ணுது
ஏதேதோ எண்ணூது
 
ஏமாளிப் பொண்ணுஇன்னு ஏதேதோ எண்ணுது
ஏதேதோ எண்ணூது  ஓ...ஓஓ.....ஓ
 
பெண்ஜாதியைத் தவிக்க விட்டுப் பேயாட்டம் ஆடுது
பெண்ஜாதியைத் தவிக்க விட்டுப் பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னைச் சுத்திக் கைத்தாளம் போடுது
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேத்த கண்ணு தான்
 
 
சிங்கமும் முயலும்
(மெட்டுக்குப் பாட்டு)
 
கம்பீர சிங்கம் தான் காட்டுக்கே மன்னன் தான்
கம்பீர சிங்கம் தான் காட்டுக்கே மன்னன் தான்
அதகண்டே பயந்ததெல்லாம் காடுவாழ் மிருகம் தான்
கம்பீர சிங்கம் தான் காட்டுக்கே மன்னன் தான்
அதகண்டே பயந்ததெல்லாம் காடுவாழ் மிருகம் தான்
கம்பீர சிங்கம் தான் காட்டுக்கே மன்னன் தான்
 
ஈடில்லா காட்டு ராஜா இதை நீங்கப் பாருங்க
 
ஈடில்லா காட்டு ராஜா இதை நீங்கப் பாருங்க
எவரேனும் எதிரில் வந்தா கொன்றே தான் தின்னுங்க
முள்ளா தான் கிடக்குங்க
 
எவரேனும் எதிரில் வந்தா கொன்றே தான் தின்னுங்க
முள்ளா தான் கிடக்குங்க ஓ...ஓஓ.....ஓ
 
கங்காரு நடுங்குது நீர் யானை பதுங்குது
கங்காரு நடுங்குது நீர் யானை பதுங்குது
வாழவே பிடிக்கவில்லை பயந்தேதான் சாகுது
கம்பீர சிங்கம் தான் காட்டுக்கே மன்னன் தான்
அதகண்டே பயந்ததெல்லாம் காடுவாழ் மிருகம் தான்
கம்பீர சிங்கம் தான் காட்டுக்கே மன்னன் தான்
 
முயலொண்ணு இதனைக் கண்டு வழி ஒன்றைக் கண்டது
 
முயலொண்ணு இதனைக் கண்டு வழி ஒன்றைக் கண்டது
வேறொரு சிங்கம் ஒண்ணு வரும்போது கண்டேனு
ஏதேதோ சொன்னது
 
வேறொரு சிங்கம் ஒண்ணு வரும்போது கண்டேனு
ஏதேதோ சொன்னது ஓ...ஓஓ.....ஓ
 
தன்நிழலைக் கிணத்தில் பாத்து சிங்கந்தான் சாகுது
 
தன்நிழலைக் கிணத்தில் பாத்து சிங்கந்தான் சாகுது
மிருகமெலாம் முயலைச் சுற்றிக் கூடியாடி மகிழுது
அறிவாளி முயலும் தான் சொன்னநல் நீதி தான்
சுஹ்ருத பேதம் தான் நமக்கொரு பாடம் தான்
இதகண்டே நீங்களெல்லாம் அறிவோடு வாழணும் தான்
சுஹ்ருத பேதம் தான் நமக்கொரு பாடம் தான்
 
 
-     வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு
-     Vellore Author P. Rajan Babu



பஞ்சதந்திரக் கதைகள் – 2) மித்ரலாபம்

பஞ்சதந்திரக் கதைகள் 2) மித்ரலாபம்

(சுகிர்லாப தந்திரம்)
(இணையானவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்தல்)
  

உத்தம புத்திரன்
(மூலம்)
 
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொழுந்து பூக்காரி
மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொழுந்து பூக்காரி
மம்முதனின் மையலிலே சொக்கிபுட்டா ஒய்யாரி
மம்முதனின் மையலிலே சொக்கிபுட்டா ஒய்யாரி
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
 
விளக்கு வைக்கிற நேரத்திலே பூப்பறிக்க போனாளாம்
 
விளக்கு வைக்கிற நேரத்திலே பூப்பறிக்க போனாளாம்
வேங்கைபோல ஆளக்கண்டு மயங்கி அங்கே நின்னாளாம்
 
வேங்கைபோல ஆளக்கண்டு மயங்கி அங்கே நின்னாளாம்
 
தளுக்குகாரி அவன்மனச மாத்திபுட்டாளாம்
கிழக்கு வானம் வெளுக்குமட்டும் பேசிகிட்டாளாம்
தளுக்குகாரி அவன்மனச மாத்திபுட்டாளாம்
கிழக்கு வானம் வெளுக்குமட்டும் பேசிகிட்டாளாம்
மனசில்லாம அவனைவிட்டு பிரிந்து வந்தாளாம்
மனசில்லாம அவனைவிட்டு பிரிந்து வந்தாளாம்
பாராமலே ஆசை தீராமலே
அவனைப் பாராமலே ஆசை தீராமலே அவ
தூக்கமெல்லாம் விட்டாலாம் தூதுபோக சொன்னாலாம்
தூக்கமெல்லாம் விட்டாலாம் தூதுபோக சொன்னாலாம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
 
மாயக்கார தூதுகாரி மாப்பிள்ளையைக் கண்டாளாம்
 
மாயக்கார தூதுகாரி மாப்பிள்ளையைக் கண்டாளாம்
மச்சான் மகளை மாலைசூட அச்சாரமே தந்தானாம்
 
மச்சான் மகளை மாலைசூட அச்சாரமே தந்தானாம்
 
பாதிஜாம நேரத்திலே வரணுமின்னானாம்
பாரிஜாத மரத்துக்கிட்ட நிக்கச்சொன்னானாம்
பாதிஜாம நேரத்திலே வரணுமின்னானாம்
பாரிஜாத மரத்துக்கிட்ட நிக்கச்சொன்னானாம்
பருந்துபோலக் காத்திருந்து தூக்கிச்செல்வானாம்
பருந்துபோலக் காத்திருந்து தூக்கிச்செல்வானாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம் என்
மச்சான் இதைக் கண்டாராம் பொல்லாகோபம் கொண்டாராம்
மச்சான் இதைக் கண்டாராம் பொல்லாகோபம் கொண்டாராம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
 
 
புறாக்களும் வேடனும்
(மெட்டுக்குப் பாட்டு)
 
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
புறாக் கூட்டம் இறையைத்தேடி பறந்திங்கு வந்ததடி
புறாக் கூட்டம் இறையைத்தேடி பறந்திங்கு வந்ததடி
வேடன்விரித்த வலையினிலே மாட்டிக்கிட்டு முழிச்சதடி
வேடன்விரித்த வலையினிலே மாட்டிக்கிட்டு முழிச்சதடி
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
 
உடன் இருந்த தலைவனோ ஓர்உபாயம் சொன்னானாம்
 
உடன் இருந்த தலைவனோ ஓர்உபாயம் சொன்னானாம்
சேர்ந்தேதான் வலையோடு பறந்து போகலாம் என்றானாம்
 
சேர்ந்தேதான் வலையோடு பறந்து போகலாம் என்றானாம்
 
வேடந்தான் அதனைக்கண்டு அதிசயித்தானாம்
பறக்கும் திசை கண்கொட்டாது பார்த்திருந்தானாம்
வேடந்தான் அதனைக்கண்டு அதிசயித்தானாம்
பறக்கும் திசை கண்கொட்டாது பார்த்திருந்தானாம்
வெகுதூரம் பறந்துவிட்டு தரை அடைந்தாராம்
வெகுதூரம் பறந்துவிட்டு தரை அடைந்தாராம்
அறிவினாலே துயர் நேராமலே
அவன் அறிவினாலே துயர் நேராமலே அவர்
துன்பமெல்லாம் தீர்த்தானாம் நீதிஒன்றை சொன்னானாம்
துன்பமெல்லாம் தீர்த்தானாம் நீதிஒன்றை சொன்னானாம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
 
நீண்டகால நண்பனான எலிதன்னை அழைத்தானாம்
 
நீண்டகால நண்பனான எலிதன்னை அழைத்தானாம்
எலிதான் வலையை அறுத்துவிட நன்றிதனை சொன்னானாம்
 
எலிதான் வலையை அறுத்துவிட நன்றிதனை சொன்னானாம்
 
துன்பமான நேரத்திலும் துணையிருந்தானாம்
நீதியித மனத்திலே நினைக்கச்சொன்னானாம்
துன்பமான நேரத்திலும் துணையிருந்தானாம்
நீதியித மனத்திலே நினைக்கச்சொன்னானாம்
தம்மைபோலச் சேர்ந்திருந்து வாழச்சொன்னானாம்
தம்மைபோலச் சேர்ந்திருந்து வாழச்சொன்னானாம்
இது மித்ரலாபமாம் நல்ல பஞ்சதந்திரமாம்
இது மித்ரலாபமாம் நல்ல பஞ்சதந்திரமாம் என்
ஆசான் இதைச் சொன்னாராம் நல்லநீதி என்றாராம்
ஆசான் இதைச் சொன்னாராம் நல்லநீதி என்றாராம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
  
 
-     வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு
-     Vellore Author P. Rajan Babu