அரசிளங்குமாரி
(மூலம்)
அத்தானே
ஆசை அத்தானே
அன்பே
உன்னை நன்னாளிலே கண்டேனே
என் ஆசைபோலக் கணவனை நான் கொண்டேனே
அத்தானே
ஆசை அத்தானே
அன்பே
உன்னை நன்னாளிலே கண்டேனே
என் ஆசைபோலக் கணவனை நான் கொண்டேனே
அரண்மனை
உத்தியோகமும் அரட்டிமிரட்டி சேவகமும்
அபாயம்
தந்திடுமே தப்பாது
அரண்மனை
உத்தியோகமும் அரட்டிமிரட்டி சேவகமும்
அபாயம்
தந்திடுமே தப்பாது
அம்மாடி
எந்த நாளும் அதுக்கும் நமக்கும் ஒவ்வாது
யாருக்குமே
அஞ்சும் நிலை கூடாது
செல்வ
சுகம் தேவையில்லே
சீமான்
வாழ்வில் நிலையுமில்லே
சீலமுடன் வாழ வேண்டும் உலகிலே
துன்பம்
நீங்கும் தன்னாலே
அன்பு
வாழ்க்கை ஒன்னாலே
இன்பம்
நேர காணலாகும் மென்மேலே
அத்தானே
ஆசை அத்தானே
அன்பே
உன்னை நன்னாளிலே கண்டேனே
என் ஆசைபோலக் கணவனை நான் கொண்டேனே
சின்னஞ்சிறு
வீட்டுக்குள்ளே சிரித்துபேசும் நேரத்திலே...... ஓ......
சின்னஞ்சிறு
வீட்டுக்குள்ளே சிரித்துபேசும் நேரத்திலே
தென்றலது
உள்ளே வந்து வீசினால்
ஜன்னலையும்
மூடிடாது சிங்காரமாய் பேசுவேன்
சந்தோஷமாய்
எந்நாளுமே வாழுவேன்
கட்டுமரத்
தோனியிலே கனியும் மாலை நேரத்திலே
களிப்புடன்
சேர்ந்து ஒன்றாய் செல்வேனே
காதல்
கதை சொல்வேனே
கவலையெல்லாம்
வெல்வேனே
காலமெல்லாம்
உன்னால் இன்பம் கொள்வேனே
காதல்
கதை சொல்வேனே
கவலையெல்லாம்
வெல்வேனே
காலமெல்லாம்
உன்னால் இன்பம் கொள்வேனே
அத்தானே
ஆசை அத்தானே
அன்பே
உன்னை நன்னாளிலே கண்டேனே
என் ஆசைபோலக் கணவனை நான் கொண்டேனே
சிங்கமும் எருதும்
(மெட்டுக்குப் பாட்டு)
காட்டிலே
கடுங் காட்டிலே
சிங்கம்
எருது நண்பர்களாய் இருந்ததே
அவை ஆசைபோலக் காட்டைச் சுற்றி வந்ததே
காட்டிலே
கடுங் காட்டிலே
சிங்கம்
எருது நண்பர்களாய் இருந்ததே
அவை ஆசைபோலக் காட்டைச் சுற்றி வந்ததே
காடுவாழ்
மிருகங்களும் அதனைகண்டு அனுதினமும்
பார்த்து
வியப்பினிலே ஆழ்ந்தது
காடுவாழ்
மிருகங்களும் அதனைகண்டு அனுதினமும்
பார்த்து
வியப்பினிலே ஆழ்ந்தது
அம்மாடி
நரி மனதில் திட்டம் ஒன்று வகுத்தது
இரண்டுமே
சேர்ந்து இருக்க கூடாது
சொல்லித் தெரிய தேவையில்லை
எதுவும்
வாழ்வில் நிலையுமில்லை
ஒன்றாய் வாழ வேண்டும் உலகிலே
துன்பம்
நீங்கும் தன்னாலே
அன்பு
வாழ்க்கை ஒன்னாலே
இன்பம்
நேர காணலாகும் மென்மேலே
துன்பம்
நீங்கும் தன்னாலே
அன்பு
வாழ்க்கை ஒன்னாலே
இன்பம்
நேர காணலாகும் மென்மேலே
காட்டிலே
கடுங் காட்டிலே
சிங்கம்
எருது நண்பர்களாய் இருந்ததே
அவை ஆசைபோலக் காட்டைச் சுற்றி வந்ததே
சிங்கம்எருது
காட்டுக்குள்ளே சேர்ந்துவாழ்ந்த நேரத்திலே
நரிதான்
தந்திர வலை வீசினான்
சிங்கம்எருது
காட்டுக்குள்ளே சேர்ந்துவாழ்ந்த நேரத்திலே
நரிதான்
தந்திர வலை வீசினான்
எருதைப் பற்றிச் சிங்கத்திடம் பலவிதமாய் கூறினான்
நண்பரிடம்
பகைதன்னை மூட்டினான்
நரியின்
சூழ்ச்சியாலே சிங்கம் எருதைக் கொன்றதே
நரிகளோ
சேர்ந்து எருதை தின்றதே
மித்ர
பேதம் சொன்னேனே
தந்திரம்ஒன்றை
அறிந்தாயே
காலமெல்லாம்
மனதில் இதனைக் கொள்வாயே
மித்ர
பேதம் சொன்னேனே
தந்திரம்ஒன்றை
அறிந்தாயே
காலமெல்லாம்
மனதில் இதனைக் கொள்வாயே
காட்டிலே
கடுங் காட்டிலே
சிங்கம்
எருது நண்பர்களாய் இருந்ததே
இப்ப
சிங்கம்மட்டும் காட்டைச் சுற்றி வந்ததே
No comments:
Post a Comment