Friday, September 18, 2020

பஞ்சதந்திரக் கதைகள் – 5) அசம்ரெஷிய காரியத்துவம்

 பஞ்சதந்திரக் கதைகள் 5) அசம்ரெஷிய காரியத்துவம்

(எந்த காரியத்தையும் ஆராயாமல் செய்தல்)
  

பாசம்
(மூலம்)
 
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
 
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
 
பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் யாரும்
அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் யாரும்
அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான் நெடுஞ்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
 
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலியவன் ஆனால்
பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் உடற்
கட்டழகு திறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திறந்திருக்கும் இளையவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
 
இன்று நாளை அவனும்கூட மாறலாம்  அவன்
இரவில் தூங்கி பகலில்கூட வாழலாம்
கன்று கண்ட தாயைப் போல ஆகலாம் அன்பு
காதல் பாசம் அவனும்கூட காணலாம்
காதல் பாசம் அவனும்கூட காணலாம்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
 
 
கீரியும் குழந்தையும்
(மெட்டுக்குப் பாட்டு)
  
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
தனது பிள்ளை போலதானே நினைத்தவன் தானே
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
 
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
தனது பிள்ளை போலதானே நினைத்தவன் தானே
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
 
கீரிப் பிள்ளை வீட்டைச் சுற்றி ஓடுமாம் யாரும்
அன்பை தானே காட்டி விட்டால் ஆடுமாம்
கீரிப் பிள்ளை வீட்டைச் சுற்றி ஓடுமாம் யாரும்
அன்பை தானே காட்டி விட்டால் ஆடுமாம்
தன் பிள்ளை வீட்டில் விட்டு செல்லுவான் அந்த
கீரி தனை துணை இருக்க சொல்லுவான்
கீரி தனை துணை இருக்க சொல்லுவான்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
 
அருகில்வந்த பாம்பைக் கொன்ற கீரியவன் ஆனால்
எஜமானின் கோபத்திற்குப் பலியவன்
அவசரத்தில் அறிவுதனை இழந்தவன் நல்
நீதிதனை எல்லோர்க்கும் சொன்னவன்
நீதிதனை எல்லோர்க்கும் சொன்னவன்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
 
இதனைக் கண்டு நீயும்கூட மாறணும் அவன்
கோபம் கொண்டு இழந்ததையும் நினைக்கணும்
அசம் ரெஷிய காரியத் துவம் புரியணும் என்றும்
யோசித்து எந்த செயலுந்தானே செய்யணும்
யோசித்து எந்த செயலுந்தானே செய்யணும்
அன்பு கொண்ட வாழ்க்கைதானே வாழ்ந்தவன் அவன்
கீரி பிள்ளை வீட்டினிலே வளர்த்தவன்
தனது பிள்ளை போலதானே நினைத்தவன் தானே
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
கீரிகொன்று வேதனை அடைந்தவன்
 
 
-     வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு
-     Vellore Author P. Rajan Babu




No comments:

Post a Comment