Friday, September 18, 2020

பஞ்சதந்திரக் கதைகள் – 2) மித்ரலாபம்

பஞ்சதந்திரக் கதைகள் 2) மித்ரலாபம்

(சுகிர்லாப தந்திரம்)
(இணையானவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்தல்)
  
உத்தம புத்திரன்
(மூலம்)
 
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொழுந்து பூக்காரி
மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொழுந்து பூக்காரி
மம்முதனின் மையலிலே சொக்கிபுட்டா ஒய்யாரி
மம்முதனின் மையலிலே சொக்கிபுட்டா ஒய்யாரி
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
 
விளக்கு வைக்கிற நேரத்திலே பூப்பறிக்க போனாளாம்
 
விளக்கு வைக்கிற நேரத்திலே பூப்பறிக்க போனாளாம்
வேங்கைபோல ஆளக்கண்டு மயங்கி அங்கே நின்னாளாம்
 
வேங்கைபோல ஆளக்கண்டு மயங்கி அங்கே நின்னாளாம்
 
தளுக்குகாரி அவன்மனச மாத்திபுட்டாளாம்
கிழக்கு வானம் வெளுக்குமட்டும் பேசிகிட்டாளாம்
தளுக்குகாரி அவன்மனச மாத்திபுட்டாளாம்
கிழக்கு வானம் வெளுக்குமட்டும் பேசிகிட்டாளாம்
மனசில்லாம அவனைவிட்டு பிரிந்து வந்தாளாம்
மனசில்லாம அவனைவிட்டு பிரிந்து வந்தாளாம்
பாராமலே ஆசை தீராமலே
அவனைப் பாராமலே ஆசை தீராமலே அவ
தூக்கமெல்லாம் விட்டாலாம் தூதுபோக சொன்னாலாம்
தூக்கமெல்லாம் விட்டாலாம் தூதுபோக சொன்னாலாம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
 
மாயக்கார தூதுகாரி மாப்பிள்ளையைக் கண்டாளாம்
 
மாயக்கார தூதுகாரி மாப்பிள்ளையைக் கண்டாளாம்
மச்சான் மகளை மாலைசூட அச்சாரமே தந்தானாம்
 
மச்சான் மகளை மாலைசூட அச்சாரமே தந்தானாம்
 
பாதிஜாம நேரத்திலே வரணுமின்னானாம்
பாரிஜாத மரத்துக்கிட்ட நிக்கச்சொன்னானாம்
பாதிஜாம நேரத்திலே வரணுமின்னானாம்
பாரிஜாத மரத்துக்கிட்ட நிக்கச்சொன்னானாம்
பருந்துபோலக் காத்திருந்து தூக்கிச்செல்வானாம்
பருந்துபோலக் காத்திருந்து தூக்கிச்செல்வானாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம் என்
மச்சான் இதைக் கண்டாராம் பொல்லாகோபம் கொண்டாராம்
மச்சான் இதைக் கண்டாராம் பொல்லாகோபம் கொண்டாராம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
 
புறாக்களும் வேடனும்
(மெட்டுக்குப் பாட்டு)
 
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
புறாக் கூட்டம் இறையைத்தேடி பறந்திங்கு வந்ததடி
புறாக் கூட்டம் இறையைத்தேடி பறந்திங்கு வந்ததடி
வேடன்விரித்த வலையினிலே மாட்டிக்கிட்டு முழிச்சதடி
வேடன்விரித்த வலையினிலே மாட்டிக்கிட்டு முழிச்சதடி
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
 
உடன் இருந்த தலைவனோ ஓர்உபாயம் சொன்னானாம்
 
உடன் இருந்த தலைவனோ ஓர்உபாயம் சொன்னானாம்
சேர்ந்தேதான் வலையோடு பறந்து போகலாம் என்றானாம்
 
சேர்ந்தேதான் வலையோடு பறந்து போகலாம் என்றானாம்
 
வேடந்தான் அதனைக்கண்டு அதிசயித்தானாம்
பறக்கும் திசை கண்கொட்டாது பார்த்திருந்தானாம்
வேடந்தான் அதனைக்கண்டு அதிசயித்தானாம்
பறக்கும் திசை கண்கொட்டாது பார்த்திருந்தானாம்
வெகுதூரம் பறந்துவிட்டு தரை அடைந்தாராம்
வெகுதூரம் பறந்துவிட்டு தரை அடைந்தாராம்
அறிவினாலே துயர் நேராமலே
அவன் அறிவினாலே துயர் நேராமலே அவர்
துன்பமெல்லாம் தீர்த்தானாம் நீதிஒன்றை சொன்னானாம்
துன்பமெல்லாம் தீர்த்தானாம் நீதிஒன்றை சொன்னானாம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
 
நீண்டகால நண்பனான எலிதன்னை அழைத்தானாம்
 
நீண்டகால நண்பனான எலிதன்னை அழைத்தானாம்
எலிதான் வலையை அறுத்துவிட நன்றிதனை சொன்னானாம்
 
எலிதான் வலையை அறுத்துவிட நன்றிதனை சொன்னானாம்
 
துன்பமான நேரத்திலும் துணையிருந்தானாம்
நீதியித மனத்திலே நினைக்கச்சொன்னானாம்
துன்பமான நேரத்திலும் துணையிருந்தானாம்
நீதியித மனத்திலே நினைக்கச்சொன்னானாம்
தம்மைபோலச் சேர்ந்திருந்து வாழச்சொன்னானாம்
தம்மைபோலச் சேர்ந்திருந்து வாழச்சொன்னானாம்
இது மித்ரலாபமாம் நல்ல பஞ்சதந்திரமாம்
இது மித்ரலாபமாம் நல்ல பஞ்சதந்திரமாம் என்
ஆசான் இதைச் சொன்னாராம் நல்லநீதி என்றாராம்
ஆசான் இதைச் சொன்னாராம் நல்லநீதி என்றாராம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
திண்டாட்டம் பிரிந்திருந்தா திண்டாட்டம்
கொண்டாட்டம் சேர்ந்திருந்தா கொண்டாட்டம்
  
-     வேலூர் கவிஞர் பொன். இராஜன் பாபு
-     Vellore Author P. Rajan Babu

No comments:

Post a Comment