Sunday, October 18, 2020

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் – 1) மச்ச அவதாரம்

மச்ச அவதாரம்
 
 
கிருத யுகத்தில்
 
படைப்பிற்கு
ஆதாரமாய்
விளங்கும்
 
ரிக் வேதம்
யஜூர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
 
ஆகிய
சதுர்
வேதங்களைத்
 
தன்னுடைய
யோக
சித்தியினால்
 
படைப்பின்
கடவுள்
பிரம்மாவிடமிருந்து
கவர்ந்து சென்று
 
கடலுக்கு
அடியில்
மறைத்து வைத்த
 
மூவுலகில் வாழும்
எவராலும்
 
அழிக்க முடியாத
வரத்தினை
சிவனிடம் பெற்ற
 
குதிரை
முகம் கொண்ட
 
அரக்கன்
சோமுகாசுரனை
அழிக்கவும்
 
சதுர்
வேதங்களை
மீட்கவும்
 
படைப்புத் தொழில்
தொடர்ந்து
நடைப்பெறவும்
 
திருமால்
எடுத்த
அவதாரம்
 
மச்சம்
(மச்ச அவதாரம்)
(Matsya Avatar)
 
 
மச்சம் என்றால்
மீன்
 
 
பரிணாம
வளர்ச்சியில்
 
உயிரினங்கள்
முதன்முதலில்
தோன்றியது
நீரில்
 
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
 
மச்ச
அவதாரம்
 
 

🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai




No comments:

Post a Comment