இராம
அவதாரம்
வைகுந்தத்தின்
நுழைவு வாயில்
காவலர்கள்
ஜெயன்
விஜயன்
மகாவிஷ்ணுவை
மகரிஷிகள்
நால்வர்
காண
வந்தபோது
அவர்களைத்
தடுத்து நிறுத்தி
அவர்களால்
சாபம் பெற்று
முதல் பிறவியாய்
கிருத யுகத்தில்
இரணிய கசிபு
இரண்யாட்சன்
எனும்
அரக்கர்களாய்
பிறந்து
திருமாலின்
வராக அவதாரத்தால்
இரண்யாட்சனும்
நரசிம்ம அவதாரத்தால்
இரணிய கசிபும்
அழிகின்றனர்.
இரண்டாம் பிறவியாய்
திரேதா யுகத்தில்
இராவணன்
கும்பகர்ணன்
ஆகப்
பிறக்கின்றனர்.
அசுரர் குல
மன்னன்
தசமுகனான
இராவணன்
கடுந்தவம்
புரிந்து
பிரம்மனிடம்
தனக்கு
தேவர்களாலோ
அசுரர்களாலோ
விலங்குகளாலோ
மரணம்
நேரக்கூடாது
என்ற
வரத்தினைப்
பெறுகின்றான்
அவனையும்
(இராவணனையும்)
அவனது
தம்பியையும்
(கும்பகர்ணனையும்)
அழித்திட
கோசல நாட்டு
மன்னன்
தசரதனுக்கும்
மனைவி
கோசலைக்கும்
தலைமகனாய்
தாயிற் சிறந்ததொரு
கோயிலுமில்லை
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை
என்பதனை
மதித்து வாழ்ந்த
உயர்மகனாய்
சீதையை
மணந்து
ஏகபத்தினி
விரதனாய்
தஞ்சமென்று
வந்தவர்க்கு
அபயம்
அளிப்பவனாய்
நீதிநெறி
தவறாத
நீதிமானாய்
மக்களின்
மனமறிந்து
ஆட்சி செய்யும்
ஆட்சியாளனாய்
திருமால்
எடுத்த
அவதாரம்
இராமன்
(இராம அவதாரம்)
(Rama Avatar)
பரிணாம
வளர்ச்சியில்
காடுகளிலும்
மலைக்
குகைகளிலும்
வாழ்ந்துவந்த
ஆதிமனிதன்
பின்பு
காட்டிலும்
நாட்டிலுமாக
மாறி மாறி
வசிந்துவந்து
முழுமைபெற்ற
மனிதனாய்
மாறினான்
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
இராம
அவதாரம்
-
கவிஞர் பொன்.
இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
ஸ்ரீ விஷ்ணுவின்
தசாவதாரம் – இராம அவதாரம்
Sri Vishnu Dasavatharam – Rama
Avatar
No comments:
Post a Comment