Sunday, October 18, 2020

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் – 6) பரசுராம அவதாரம்

பரசுராம அவதாரம்
 
 
திரேதா யுகம்
 
ஜமதக்கினி
ரேணுகா தேவி
தம்பதியரின்
 
புதல்வர்கள்
நால்வரில்
பலம் பொருந்திய
கடைசி மகன்
 
பரசுராமன்
 
தனது
தவத்தின் பலனால்
 
பரமசிவனிடம்
பரசு என்ற
கோடரி
பெற்றவன்
 
 
அதுமட்டுமல்ல
 
 
பாரதர்களின்
பாட்டன்
பிதாமகர் பீஷ்மர்
 
கௌரவர் மற்றும்
பாண்டவரின்
ஆசான் துரோணர்
 
கொடை வள்ளல்
கர்ணன்
 
ஆகியோரின்
குரு
 
 
மாமுனி
ஜமதக்கினி
தன் மனைவி
ரேணுகா தேவி
 
ஒரு சமயம்
மனச் சபலமுற்றதை
அறிந்து
 
அதிக
கோபமுற்று
அவளைக்
கொன்று வா
என
ஆணையிட
 
தந்தையின்
ஆணையினைச்
சிரமேற்கொண்டு
 
தாயையும்
தடுத்த
சகோதரர்களையும்
கொன்று
 
தந்தையிடமே
மீண்டும் வரமாக
இறந்தவர்களை
உயிர்
பிழைக்கச் செய்து
 
தந்தை சொல்மிக்க
மந்திரம் இல்லை
என்பதை
உலகிற்கு உணர்த்த
 
திருமால்
எடுத்த
அவதாரம்
 
பரசுராமன்
(பரசுராம அவதாரம்)
(Parashurama Avatar)
 
 
பரிணாம
வளர்ச்சியில்
 
காடுகளிலும்
மலைக்
குகைகளிலும்
வாழ்ந்து வந்த
ஆதிமனிதன்
 
மிருகங்களையும்
எதிரிகளையும்
 
தனது
சக்தியினால்
 
மூர்க்கமாகத்
தாக்கி
வாழ்ந்தான்
 
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
 
பரசுராம
அவதாரம்
 
 
 
-     கவிஞர் பொன். இராஜன் பாபு
 
-     Author P. Rajan Babu
 
 
ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரம் பரசுராம அவதாரம்
 
Sri Vishnu Dasavatharam Parashurama Avatar



No comments:

Post a Comment