வராக
அவதாரம்
கிருத யுகத்தில்
வைகுந்தத்தின்
நுழைவு வாயில்
காவலர்கள்
ஜெயன்
விஜயன்
மகாவிஷ்ணுவை
மகரிஷிகள்
நால்வர்
காண
வந்தபோது
அவர்களைத்
தடுத்து நிறுத்தி
சாபம் பெற்று
கஸ்யபர் – திதி
தம்பதியர்க்கு
இரணிய கசிபு
இரண்யாட்சன்
என்னும்
அரக்கர்களாய்
பிறந்தார்கள்
இளையவன்
இரண்யாட்சன்
பிரம்மனிடம்
பெற்ற வரத்தால்
பலசாலியாகி
ஆணவத்தால்
அறிவிழந்து
பூமியைக்
கவர்ந்து
சென்று
கடலடியில்
வைக்க
அவனை
அழிக்கவும்
அவனியைக்
காக்கவும்
திருமால்
எடுத்த
அவதாரம்
வராகம்
(வராக அவதாரம்)
(Varaha Avatar)
வராகம் என்றால்
பன்றி
பரிணாம
வளர்ச்சியில்
நீரிலும்
நிலத்திலும்
வாழ்ந்த
உயிரினங்கள்
நிலத்தில்
மட்டும்
வாழ்வதற்கான
தகவமைப்பைப்
பெற்றன
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
வராக
அவதாரம்
No comments:
Post a Comment