வாமன
அவதாரம்
திரேதா யுகம்
இரணிய கசிபின்
கொள்ளுப்பேரன்
பிரகலாதனின்
பேரன்
விரோசனின்
மகன்
மகாபலி
சக்கரவர்த்தி
(மாவலி)
அவன்
(மகாபலி)
அரக்கர் குல
அரசன்
வலிமையில்
வல்லவன்
கற்றறிந்த
ஞானி
அன்பிற்கு
இலக்கணம்
தர்மத்தின்
அடையாளம்
திருமாலின்
தீவிர பக்தன்
இருப்பினும்
தான்
செய்யும்
தர்ம
காரியங்களால்
கர்வம்
கொண்டிருந்தவன்
அச்சமயம்
கஷ்யபர் – அதிதி
தம்பதியர்க்கு
வாமனராகப்
பிறப்பெடுத்து
மூன்றடி
உருவமே கொண்ட
வாமனர்
மகாபலியிடம்
சென்று
மூன்றடி
மண் கேட்டு
திருவிக்கிரம
வடிவம் எடுத்து
ஒரு
காலடியால்
கீழுலகங்களையும்
மறு
காலடியால்
மேலுலகங்களையும்
மூன்றாம்
அடியை
மகாபலியின்
தலையில் வைத்து
அவனையும்
அவனது
ஆணவத்தையும்
அழித்திட
திருமால்
எடுத்த
அவதாரம்
வாமனன்
(வாமன அவதாரம்)
(Vamana Avatar)
வாமனன் என்றால்
குறுகியவன்
பரிணாம
வளர்ச்சியில்
விலங்கிலிருந்து
மனிதனாக
மாற்றம்
அடையும்போது
பாதி விலங்கு
பாதி மனிதன்
சேர்ந்த
நிலையையும்
தாண்டி
முழு வளர்ச்சி
அடையாதவன்
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
வாமன
அவதாரம்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
ஸ்ரீ விஷ்ணுவின்
தசாவதாரம் – வாமன அவதாரம்
Sri Vishnu Dasavatharam – Vamana
Avatar
No comments:
Post a Comment