Sunday, October 18, 2020

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் – 4) நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரம்
 
 
கிருத யுகத்தில்
 
இளையவன்
இரண்யாட்சனை
 
வைகுந்த நாதன்
வராக மூர்த்தியாய்
 
அவதரித்து
அழித்துவிட
 
கோபம் கொண்ட
இரணிய கசிபு
(இரணியன்)
 
தேவர்களையும்
 
அவர்களுக்குத்
துணையாய்
நிற்கும்
திருமாலையும்
 
கொன்று
அழிக்க
 
பிரம்மாவை
நோக்கி
 
பகலிரவு
பாராது
 
கடும்
தவமிருந்து
 
எவராலும்
எதனாலும்
அழிக்க
முடியாத
 
சாகா
வரத்தைப்
பெறுகின்றான்
 
 
பெற்ற
வரத்தால்
 
மூவுலகுக்கும்
தான்தான்
இறைவன்
என்று
 
இறுமாப்பு
கொண்ட
இரணியனைக்
 
கொன்று
அழிக்கவும்
 
பரம
பக்தனான
இரணியனின்
மகன்
பிரகலாதனைக்
காத்திடவும்
 
திருமால்
எடுத்த
அவதாரம்
 
நரசிம்மம்
(நரசிம்ம அவதாரம்)
(Narasimha Avatar)
 
 
நரன் என்றால்
மனிதன்
 
சிம்மம் என்றால்
சிங்கம்
 
 
பரிணாம
வளர்ச்சியில்
 
விலங்கிலிருந்து
மனிதனாக
மாற்றம்
அடையும்போது
 
 
விலங்கும்
மனிதனும்
சேர்ந்த நிலை
பெற்றிருந்தது
 
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
 
நரசிம்ம
அவதாரம்
 
 
 
-     கவிஞர் பொன். இராஜன் பாபு
 
-     Author P. Rajan Babu
 
 
ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரம் நரசிம்ம அவதாரம்
 
Sri Vishnu Dasavatharam Narasimha Avatar



No comments:

Post a Comment