Sunday, October 18, 2020

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் – 9) கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம்
 
 
வைகுந்தத்தின்
நுழைவு வாயில்
காவலர்கள்
 
ஜெயன்
விஜயன்
 
மகாவிஷ்ணுவை
மகரிஷிகள்
நால்வர்
 
காண
வந்தபோது
 
அவர்களைத்
தடுத்து நிறுத்தி
 
அவர்களால்
சாபம் பெற்று
 
 
முதல் பிறவியாய்
 
 
கிருத யுகத்தில்
 
இரணிய கசிபு
இரண்யாட்சன்
 
எனும்
அரக்கர்களாய்
பிறந்து
 
திருமாலின்
 
வராக அவதாரத்தால்
இரண்யாட்சனும்
 
நரசிம்ம அவதாரத்தால்
இரணிய கசிபும்
 
அழிகின்றனர்.
 
 
இரண்டாம் பிறவியாய்
 
 
திரேதா யுகத்தில்
 
இராவணன்
கும்பகர்ணன்
 
எனும்
அசுரர்களாகப்
பிறந்து
 
திருமாலின்
இராம அவதாரத்தால்
அழிகின்றனர்.
 
 
மூன்றாம் பிறவியாய்
 
 
துவாபர யுகத்தில்
 
சிசுபாலன்
தந்தவர்த்தன்
 
ஆகப்
பிறக்கின்றனர்.
 
 
அவர்களையும்
(சிசுபாலன் தந்தவர்த்தன்)
 
அந்த யுகத்தில்
அக்கிரமங்கள்
அதிகரிக்க
காரணமாயிருந்த
 
கம்சன் போன்ற
அசுரர்களைக்
கொன்றழிக்கவும்
 
பாண்டவர்களுக்கு
பக்கபலமாயிருந்து
கௌரவர்களைப்
பழித்தீர்க்கவும்
 
வசுதேவர் தேவகி
மகனாக
 
திருமால்
எடுத்த
அவதாரம்
 
கிருஷ்ணன்
(கிருஷ்ண அவதாரம்)
(Krishna Avatar)
 
 
பரிணாம
வளர்ச்சியில்
 
காட்டிலும்
நாட்டிலுமாக
மாறி மாறி
வசிந்துவந்த
மனிதன்
 
காட்டினை
விட்டு
நாட்டிற்கு
வந்து
 
தனது
சிந்தனையாலும்
செயலாலும்
முழுமைபெற்று
 
இறை நிலை
அடைகின்றான்
 
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
 
கிருஷ்ண
அவதாரம்
 
 

🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai




No comments:

Post a Comment