Sunday, October 18, 2020

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் – 10) கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்
 
 
இந்துக்களின்
காலக்கணிப்பு
முறையில்
 
மனிதர்கள்
வாழும்
யுகங்கள்
நான்கு
 
 
அவைகள்
முறையே
 
கிருத யுகம்
திரேதா யுகம்
துவாபர யுகம்
கலியுகம்
 
 
ஒவ்வொரு
யுகத்திலும்
 
தர்மம் அழிந்து
அதர்மம்
ஓங்கும்போது
 
நல்லோரைக்
காக்கவும்
 
தீயோரை
அழிக்கவும்
 
அறத்தை
நிலைநாட்டவும்
 
பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும்
பரந்தாமன்
 
அவனியில்
அவதரிப்பது
அவதாரம்
 
 
அவ்வகையில்
 
 
முதல் மூன்று
யுகங்களில்
திருமால் எடுத்த
அவதாரங்கள்
 
ஒன்பது
 
 
தற்போது
நாம் வாழ்வது
கடைசி யுகமான
கலியுகம்
 
 
மற்ற
மூன்று யுகங்களை
ஒப்பிடுகையில்
 
கலியுகமே
மிகவும் கொடியது
 
 
ஏனெனில்
 
 
இந்த
யுகத்தில்தான்
 
மக்கள்
 
 
பக்தி
இல்லாமல்
இறைவனை
வழிபட்டும்
 
ஒழுக்கம்
இல்லாத
கல்வியைக்
கற்றும்
 
உழைப்பு
இல்லாமல்
செல்வத்தைச்
சேர்த்தும்
 
மனசாட்சிக்கு
ஒப்புதலில்லாத
இன்பத்தை
அடைந்தும்
 
நாணயம்
இல்லாமல்
வாணிபத்தைச்
செய்தும்
 
மனிதநேயம்
இல்லாத
அறிவியலை
வளர்த்தும்
 
கொள்கை
இல்லாத
அரசியலை
நடத்தியும்
 
 
கண்ணிருந்தும்
குருடர்களாய்
 
காதிருந்தும்
செவிடர்களாய்
 
வாயிருந்தும்
ஊமைகளாய்
 
அறிவிருந்தும்
மூடர்களாய்
 
போலியான
வாழ்க்கை
 
வாழ்ந்து
வருகின்றனர்
 
 
இதன் விளைவு
 
 
நாம்
நாள்தோறும்
நம்
அன்றாட வாழ்வில்
காணும்
 
அவலங்கள்
அழுகுரல்கள்
அட்டகாசங்கள்
அநீதிகள்
அதர்மங்கள்
எனும்
 
அவமானத்தின்
அடையாளங்கள்
 
 
எனவேதான்
 
 
இந்த யுகத்தின்
இன்னொரு பெயர்
இருண்ட காலம்
(கலி காலம்)
 
 
ஆன்றோராலும்
சான்றோராலும்
அரும்பாடுபட்டு
திருத்த முயன்றும்
முடியாமல் போன
 
இந்த
இருண்ட காலத்தின்
இறுதி முடிவுதான்
 
பரந்தாமனின்
பத்தாம் அவதாரமான
 
கல்கி அவதாரம்
(Kalki Avatar)
 
 
 
-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu
 
 
ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரம் கல்கி அவதாரம்

Sri Vishnu Dasavatharam  Kalki Avatar




No comments:

Post a Comment