Monday, December 23, 2019

16 செல்வங்கள் – 1) கலையாத கல்வி


நூல்கள் பல
கற்பதால்
பெற்றிடும் அறிவு
கல்வி

கற்றவர்கள் சொல்
கேட்பதால்
பெற்றிடும் அறிவு
கேள்வி

வாழ்வில் பழகி
உணர்வதால்
பெற்றிடும் அறிவு
அனுபவம்

இதில்

அறிவின்
அடிப்படை நிலை
கல்வி.

கல்வியே

பேதையை
மேதையாக்குவது

உண்மைகளை
உணர்த்துவது

ஆண்டவன்
அருகில்
அனைவரையும்
அழைத்துச் செல்வது

மனிதனை
மகானாக்குவது

பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையிலான

வாழ்வை

அமைதியாக்குவது
ஆனந்தமாக்குவது
இனிமையாக்குவது

இப்பூவுலகில்

இறந்தும் இறவா
புகழைத் தருவது

அதுமட்டுமல்ல

வெள்ளத்தால்
போகாத

வெந்தணலால்
வேகாத

கொள்ளத்தான்
முடியாத

கொடுத்தாலும்
குறையாத

களவாட
முடியாத

அறிவெனும்
நிலையான செல்வம்

அழியாத கல்வி.


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





No comments:

Post a Comment