Saturday, December 21, 2019

16 செல்வங்கள் – வாழ்த்துரை


அன்னை
அபிராமி மீது
அபிராமி பட்டர் பாடி
அருளிய
அற்புதப் பாடல்களில்

பதினாறு பேறு
பற்றிய
பாட்டும் ஒன்று.

பதினாறு பேறுகளை
ஒவ்வொன்றாய்
ஆராய்ந்து
பைந்தமிழில்
எளிமையாய்
விரித்துரைத்திருக்கிறார்
பொன். இராஜன் பாபு.

எதையும்
செம்மையாய் செய்யும்
ஆற்றலின்
மறுவடிவான இவர்

ஓர்
ஓவியக் கவிஞர்

ஒவ்வொரு தலைப்பிலும்
கவிஞரின் கைவண்ணம்

அடடா..

எளிமையும் இனிமையும்
கைகோர்த்து
களிநடம் புரியும்
அலங்காரம்.

அன்பு அகலாத மனைவி
எனும் தலைப்பில்

ஆண்டவரின் உடம்பில்
இடம்பிடித்த
மனைவியின் பெருமையை

பாங்குற
படம் பிடித்தது
அருமையிலும் அருமை.

வளர்ந்து கடக்காமல்
பயனுடன்
வாழ்ந்து கடப்பதே
மக்களின் பொறுப்பு

எனக்
கட்டுரை பத்தில்

மாண்புடன்
யாத்துள்ளார்
நல்லதொரு கருத்து.

அன்னை அபிராமி
அருளோடு

எங்கள் இராஜன்

வாழ்க
இன்னும்
ஒரு நூறாண்டு.


அன்புடன்
கவிஞர் ச. இலக்குமிபதி




No comments:

Post a Comment