உலகில் வாழும்
உயிர்களுக்கெல்லாம்
உருவம் கொடுப்பது
உடல்.
ஆண்டவனின்
அற்புத படைப்பான
அது
ஐம்பொறிகளால்
ஆன
உயிரின் வீடு
அற்புதங்களும்
ஆச்சரியங்களும்
நிரம்பிய
அதிசயக் கூடு
உடலின் வளர்ச்சி
உயிரின் வளர்ச்சி
உயிரின் வளர்ச்சி
உணர்வெனும்
மனதின் வளர்ச்சி
மனதின் வளர்ச்சி
மனித வாழ்வின்
மட்டற்ற மகிழ்ச்சி
உடலின் நலமே
உயிரின் நலம்
உயிரின் நலமே
உணர்வெனும்
மனதின் நலம்
மனதின் நலமே
மனித வாழ்வின்
ஆன்மீக பலம்
உள்ளம்
பெருங்கோயில்
ஊன் உடம்பு ஆலயம்
இதனை அறிந்தும்
உடலைப் பாதுகாத்து
பராமரிக்காமல்
பிறப்பு முதல்
இறப்பு வரை
எண்ணற்ற
நோய்களுக்கு ஆளாகி
மனித உயிர்கள்
அற்ப ஆயுளில்
மடிகின்றன
சுவர் இருந்தால்தான்
சித்திரம்
உடலின்
ஆரோக்கியம்
உயிரின்
பெரும்பாக்கியம்
மற்ற எல்லாச்
செல்வங்களிலும்
குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வு
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment