பஞ்ச பூதங்களால்
பூஞ்சோலையாக
படைக்கப்பட்டது
பூமி
அதில்
இயற்கை
ஆண்டவனின்
அருட்கொடை
உயிர்கள்
சுவாசிக்கும்
காற்றிலிருந்து
அவற்றின்
அடிப்படைத்
தேவைகளான
அனைத்து
வளங்களையும்
கொண்ட
அமுதசுரபி
அள்ள அள்ளக்
குறையாத
அட்சயப் பாத்திரம்
உணர்ந்தால்
உண்மை புரியும்.
மனிதனின்
அடிப்படை தேவைகள்
மூன்றுதான்
உடல் வளர்ந்திட
உணவு
பண்பாடு காத்திட
உடை
இருந்து மகிழ்ந்திட
உறையுள்
இருப்பினும்
உண்ணவும்
உடுக்கவும்
இருக்கவும்
மட்டுமல்ல
மனித
வாழ்க்கை
வளமாய் அமைய
இறைவன்
படைத்த
இயற்கை வளங்கள்
ஏராளம்
மனிதன்
உருவாக்கிய
செயற்கை வளங்கள்
தாராளம்
ஆதலால்
நமது வாழ்வில்
போற்றி
பாதுகாக்க
வேண்டிய செல்வம்
நிறைவான வளமை
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment