Friday, December 20, 2019

16 செல்வங்கள் – என்னுரை


தொன்றுதொட்டு
தமிழ்
பண்பாட்டின்படி

வணக்கத்திற்குரிய
பெரியவர்கள்
சிறியவர்களை
வாழ்த்தும்போது

ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்றம்
முழுமையாய் சூழ

பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க

என உள்ளன்போடு
வாழ்த்தி மகிழ்வர்

அச்செல்வங்கள்
பதினாறும்
கிடைக்கப் பெற்றவர்
எவராயினும்

வளமையான வாழ்க்கை
வாழ்வது உறுதி
என்பது

அவர்களின்
அசைக்க முடியாத
நம்பிக்கை

நானும் அதனை
வழிமொழிந்து

நம்பிக்கைக்குரிய
அச்செல்வங்கள்
பதினாறையும்

அபிராமி பட்டர்
அருளிய
அபிராமி அம்மை
பதிகத்தின்
முதல் பாடலிருந்து
எடுத்து
பட்டியலிட்டு

அவற்றின்
மேன்மை குறித்து

என்
சிற்றறிவில் பட்ட
சில
விளக்கங்களைத்
தங்கள் முன்
வைக்கின்றேன்

குற்றம் குறைகள்
ஏதேனுமிருப்பின்
மன்னித்து அருள்க

அச்செல்வங்கள்
பதினாறையும்

நீங்களும் பெற்று
பெருவாழ்வு வாழ்க
என மனமாற
வாழ்த்துகின்றேன்.


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore - Author P. Rajan Babu



No comments:

Post a Comment