Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 5) குன்றாத இளமை


ஆண்டவனின்
அருட்கொடை
மனித பிறப்பு

மனித வாழ்வின்
வளர்ச்சி நிலைகள்

முறையே

குழந்தைப் பருவம்
பாலப் பருவம்
பள்ளிப் பருவம்
காதற் பருவம்
குடும்பப் பருவம்
தளர்ச்சிப் பருவம்
மூப்புப் பருவம்

சுருங்கக்கூறின்

குழந்தைப் பருவம்
இளமைப் பருவம்
முதுமைப் பருவம்

இதில்

பெற்றோரின்
பாதுகாப்பில்
பயணிக்கும் பருவம்
குழந்தைப் பருவம்

பிள்ளைகளின்
அரவணைப்பில்
ஓய்வெடுக்கும் பருவம்
முதுமைப் பருவம்

இவ்விரண்டிற்கும்
இடைப்பட்ட
இளமைப் பருவமே

மனித வாழ்வில்
மகிழ்ச்சி
நிறைந்த பருவம்

வெள்ளை
உள்ளமும்
விளையாட்டு
குணமும்
கொண்ட பருவம்

உடலும் மனமும்
விரைந்து
செயலாற்றும் பருவம்

சாதிக்க
துடிக்கும் பருவம்

காதல்
அரும்பும் பருவம்

தனது வாழ்வினைத்
தானே
தீர்மானிக்கும் பருவம்

ஆகவே

இந்த
அழகுப் பருவத்தில்

அமைய வேண்டிய
ஆரோக்கியச் செல்வம்

திடமான இளமை


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu





No comments:

Post a Comment