அபிராமி அம்மை பதிகம்
அபிராமி பட்டர்
கலையாத கல்வியும்
குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையுங்
குன்றாத இளமையும்
கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத
மனைவியும்
தவறாதசந் தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில்
அன்பும்உதவிப் பெரிய
தொண்ட ரொடு கூட்டு
கண்டாய்
அலையாழி அறிதுழிலும்
மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம்
அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே..!
1) அழியாத கல்வி, 2) நீண்ட
ஆயுள், 3) வஞ்சமில்லா நட்பு, 4) நிறைவான வளமை, 5) திடமான இளமை, 6) நோயற்ற வாழ்வு, 7)
கலங்காத மனம், 8) அன்பான மனைவி, 9) குற்றமில்லாக் குழந்தைகள், 10) சரியாத புகழ், 11)
வாய்மை, 12) இல்லையென்று சொல்லாத உதவி, 13) நீங்காத செல்வம், 14) வளையாத செங்கோல்,
15) மகிழ்ச்சியான வாழ்வு, 16) இறை நம்பிக்கை ஆகிய பதினாறு செல்வங்களையும் தந்து
நின் அடியார்களோடு சேர்த்து விட்டாய் அலைகடலில் பள்ளிக்கொண்டிருக்கும் திருமாலின்
சகோதரியே ஆதி கடவூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்ருதகடேஸ்வரரின் ஒரு
பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் நன்மை தரும் கரத்தினளே அருள்பாலித்து (சிவனின்)
இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே அபிராமியே...!
No comments:
Post a Comment