Friday, January 24, 2020

சாலை பாதுகாப்பு - 18) வேகம்

வேகம் - Speed

உண்மை

சாலையிலே அசுரவேகம்...!
நிச்சயம் நரகலோகம்...!!

அதிவேகப் பயணத்தால்
அஸ்தமிக்கப்படுகிறது மனித ஜனனம்...!

100-ல் வாகனத்தை இயக்குவதால்
108 பின் தொடரும் அவலம்...!


உபதேசம்

சாலையில் முந்தாதே...!
வாழ்க்கையில் முந்து...!!

அவசரம் என்ன அவசரமோ...!
தவறினால் உயிரும் திரும்ப வருமோ...?

ஆற்றல்மிக்க மனித சக்தியை
ஆக்ஸிலேட்டர் அமுக்கத்தில் அழித்துவிடாதீர்...!


உறுதிமொழி

முந்த மாட்டோம்...!  முந்த மாட்டோம்...!
குறுகிய சாலைகளில் முந்த மாட்டோம்...!!

ஓட்டிடுவோம்...!  ஓட்டிடுவோம்...!
பாதுகாப்பாக வாகனம் ஓட்டிடுவோம்...!!

சாலையில் வேகமாய் செல்ல மாட்டோம்...!
வாழ்வினில் சோகம் அடைய மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 17) வேகம்

வேகம் - Speed

உண்மை

சேமிக்க நினைத்தது சில நொடிகள்...!
சேதம் அடைந்தது பல உயிர்கள்...!!

மிதமான வாகனப் பயணம்...!
மீதமாகும் வாழ்க்கைப் பயணம்...!!

வேகம் சோகத்தைத் தரும்...!
நிதானம் நிம்மதியைத் தரும்...!!


உபதேசம்

100-ல் செல்லாதீர்...!
108-ல் போகாதீர்...!!

மெதுவா சென்று வாங்க ரோட்டில்...! உங்க
குடும்பம் காத்திருக்கு உங்க வீட்டில்...!!

மீறாதீர்...!  மீறாதீர்...!
வேக வரம்பை மீறாதீர்...!!


உறுதிமொழி

ஓட்ட மாட்டோம்...!  ஓட்ட மாட்டோம்...!
வேகமாக வாகனம் ஓட்ட மாட்டோம்...!!

முந்த மாட்டோம்...!  முந்த மாட்டோம்...!
குறுகிய சாலைகளில் முந்த மாட்டோம்...!!

மீற மாட்டோம்...!  மீற மாட்டோம்...!
வேக வரம்பை மீற மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 16) போதை

போதை - Intractable

உண்மை

சாலையில் போதை...!
மரணத்தின் பாதை...!!

போதையில் பயணம்...!
பாதையில் மரணம்...!!

போதையில் வாகனம் ஓட்டுவது...!
பயணிகளுக்கு தகனம் காட்டுவது...!!


உபதேசம்

ஓட்டாதீர்...!  ஓட்டாதீர்...!
குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்...!!

அசதியைப் போக்க கோட்டரா...!
கண்ணீர் அஞ்சலி போஸ்டரா...!!

போதையில் வாகனம் ஓட்டாதீர்...!
பயணிகளுக்கு தகனம் காட்டாதீர்...!!


உறுதிமொழி

ஓட்ட மாட்டோம்...!  ஓட்ட மாட்டோம்...!
குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டோம்...!!

போதையில் வாகனம் ஓட்ட மாட்டோம்...!
பாதையில் மரணம் அடைய மாட்டோம்...!!

போதையில் வாகனம் ஓட்ட மாட்டோம்...!
பயணிகளுக்கு தகனம் காட்ட மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 15) தலைக்கவசம்

தலைக்கவசம் - Helmet

உண்மை

தர்மம் தலைகாக்கும்...!
தலைக்கவசம் உயிர்காக்கும்...!!

ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு...!
இதுவே உனது உயிர்க்காப்பு...!!

தலைக்கவசம் தன்னுயிர் காக்கும்...!
தன்னுயிர் தன்னுறவு காக்கும்...!!


உபதேசம்

தலைக்கவசம் அணிவீர்...!
உயிரிழப்பைத் தவிர்ப்பீர்...!!

உரிமம் வாங்க எட்டுப் போடு...!
உயிரைக் காக்க ஹெல்மெட் போடு...!!

பயணம் தோறும் தலைக்கவசமே...!
எமனே நெருங்கினாலும் விரட்டிடுமே...!!


உறுதிமொழி

ஹெல்மெட்டை அணிந்திடுவோம்...!
உயிரிழப்பைத் தடுத்திடுவோம்...!!

உரிமம் வாங்க எட்டுப் போடுவோம்...!
உயிரைக் காக்க ஹெல்மெட் போடுவோம்...!!

பயணம் தோறும் தலைக்கவசம் அணிந்திடுவோம்...!
எமனே நெருங்கினாலும் விரட்டி அடித்திடுவோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 14) சாலை விதிகள்

சாலை விதிகள் Road Rules

உண்மை

நடைபாதையில் நடப்போம்...!
நலமுடனே நாமும் பயணிப்போம்...!!

மஞ்சள் கோட்டை தாண்டுவது
மரண எல்லையைத் தொடுவது...!

விலை மதிப்பில்லா மனித உயிரினை
சாலை விபத்திலா பறி கொடுப்பது...!


உபதேசம்

பொறுப்புடன் வாகனம் ஓட்டிடுவீர்...!
சிறப்புடன் வாழ்க்கை வாழ்ந்திடுவீர்...!!

ஏற்றாதீர்...!  ஏற்றாதீர்...!
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றாதீர்...!!

செய்யாதீர்...!  செய்யாதீர்...!
சரக்கு வாகனங்களில் பயணம் செய்யாதீர்...!!


உறுதிமொழி

பொறுப்புடன் வாகனம் ஓட்டிடுவோம்...!
சிறப்புடன் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்...!!

ஏற்ற மாட்டோம்....!  ஏற்ற மாட்டோம்...!
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்ற மாட்டோம்...!!

செய்ய மாட்டோம்...!  செய்ய மாட்டோம்...!
சரக்கு வாகனங்களில் பயணம் செய்ய மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 13) சாலை விதிகள்

சாலை விதிகள் Road Rules

உண்மை

முறையான வாகன இயக்கம்...!
முத்தாய் அமைந்திடும் பயணம்...!!

நான்குமுனை சந்திப்பில் வெட்டிப்பேச்சு...!
விபத்துக்கு நாமே விதை போட்டாச்சு...!!

வரிசையான வாகன நிறுத்தம்...!
அதுதான் சுற்றத்தாரின் சிரமம் நீக்கும்...!!


உபதேசம்

வேண்டாம்...!  வேண்டாம்...!
சாலையில் திடீர் குறுக்கீடு வேண்டாம்...!!

உலவ விடாதீர்...!  உலவ விடாதீர்...!
சாலைகளில் கால்நடைகளை உலவ விடாதீர்...!!

செய்யாதீர்...!  செய்யாதீர்...!
சாலையில் ஆக்கிரமிப்பு செய்யாதீர்...!!


உறுதிமொழி

வழி கொடுப்போம்...!  வழி கொடுப்போம்...!
அவசர ஊர்திகளுக்கு வழி கொடுப்போம்...!!

விட மாட்டோம்...!  விட மாட்டோம்...!
சாலைகளில் கால்நடைகளை விட மாட்டோம்...!!

செய்ய மாட்டோம்...!  செய்ய மாட்டோம்...!
சாலையில் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 12) சாலை விதிகள்

சாலை விதிகள் Road Rules

உண்மை

மன நலமும் உடல் நலமும்
உயிருள்ளவரை அழியாத சொத்து...!

முறையான வாகன பராமரிப்பு...!
ஓட்டுனரின் முத்தான பங்களிப்பு...!!

சாலையைப் பார்...!
சேலையைப் பார்க்காதே...!!


உபதேசம்

ஓட்டாதீர்...!  வாகனம் ஓட்டாதீர்...!
உடல் நலக் குறைவோடு வாகனம் ஓட்டாதீர்...!!

ஓட்டாதீர்...!  வாகனம் ஓட்டாதீர்...!
உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்...!!

ஓட்டாதீர்...!  வாகனம் ஓட்டாதீர்...!
இனக்கவர்ச்சியில் வாகனம் ஓட்டாதீர்...!!


உறுதிமொழி

ஓட்ட மாட்டோம்...!  வாகனம் ஓட்ட மாட்டோம்...!
உடல் நலக் குறைவோடு வாகனம் ஓட்ட மாட்டோம்...!!

ஓட்ட மாட்டோம்...!  வாகனம் ஓட்ட மாட்டோம்...!
உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட மாட்டோம்...!!

ஓட்ட மாட்டோம்...!  வாகனம் ஓட்ட மாட்டோம்...!
இனக்கவர்ச்சியில் வாகனம் ஓட்ட மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



சாலை பாதுகாப்பு - 11) சாலை விதிகள்

சாலை விதிகள் Road Rules

உண்மை

சாலையிலே சாகச பயணம்...!
விபத்தாலே அகால மரணம்...!!

வாகன இடைவெளி காப்போம்...!
வாழ்வில் இன்னலைத் தவிர்ப்போம்...!!

நடைபாதையில் நடப்போம்...!
நலமுடனே நாமும் பயணிப்போம்...!!


உபதேசம்

வேண்டாம்...!  வேண்டாம்...!
சாலையில் சர்க்கஸ் சாகசம் வேண்டாம்...!!

தெரிந்து கொள்வீர்...!  தெரிந்து கொள்வீர்...!
போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வீர்...!!

மதித்திடுவீர்...!  மதித்திடுவீர்...!
போக்குவரத்து விதிகளை மதித்திடுவீர்...!!


உறுதிமொழி

செய்ய மாட்டோம்...!  செய்ய மாட்டோம்...!
சாலையில் சாகசம் செய்ய மாட்டோம்...!!

தெரிந்து கொள்வோம்...!  தெரிந்து கொள்வோம்...!
போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வோம்...!!

மதித்திடுவோம்...!  மதித்திடுவோம்...!
போக்குவரத்து விதிகளை மதித்திடுவோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu