Friday, January 24, 2020

சாலை பாதுகாப்பு - 11) சாலை விதிகள்

சாலை விதிகள் Road Rules

உண்மை

சாலையிலே சாகச பயணம்...!
விபத்தாலே அகால மரணம்...!!

வாகன இடைவெளி காப்போம்...!
வாழ்வில் இன்னலைத் தவிர்ப்போம்...!!

நடைபாதையில் நடப்போம்...!
நலமுடனே நாமும் பயணிப்போம்...!!


உபதேசம்

வேண்டாம்...!  வேண்டாம்...!
சாலையில் சர்க்கஸ் சாகசம் வேண்டாம்...!!

தெரிந்து கொள்வீர்...!  தெரிந்து கொள்வீர்...!
போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வீர்...!!

மதித்திடுவீர்...!  மதித்திடுவீர்...!
போக்குவரத்து விதிகளை மதித்திடுவீர்...!!


உறுதிமொழி

செய்ய மாட்டோம்...!  செய்ய மாட்டோம்...!
சாலையில் சாகசம் செய்ய மாட்டோம்...!!

தெரிந்து கொள்வோம்...!  தெரிந்து கொள்வோம்...!
போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வோம்...!!

மதித்திடுவோம்...!  மதித்திடுவோம்...!
போக்குவரத்து விதிகளை மதித்திடுவோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



No comments:

Post a Comment