Friday, January 24, 2020

சாலை பாதுகாப்பு - 18) வேகம்

வேகம் - Speed

உண்மை

சாலையிலே அசுரவேகம்...!
நிச்சயம் நரகலோகம்...!!

அதிவேகப் பயணத்தால்
அஸ்தமிக்கப்படுகிறது மனித ஜனனம்...!

100-ல் வாகனத்தை இயக்குவதால்
108 பின் தொடரும் அவலம்...!


உபதேசம்

சாலையில் முந்தாதே...!
வாழ்க்கையில் முந்து...!!

அவசரம் என்ன அவசரமோ...!
தவறினால் உயிரும் திரும்ப வருமோ...?

ஆற்றல்மிக்க மனித சக்தியை
ஆக்ஸிலேட்டர் அமுக்கத்தில் அழித்துவிடாதீர்...!


உறுதிமொழி

முந்த மாட்டோம்...!  முந்த மாட்டோம்...!
குறுகிய சாலைகளில் முந்த மாட்டோம்...!!

ஓட்டிடுவோம்...!  ஓட்டிடுவோம்...!
பாதுகாப்பாக வாகனம் ஓட்டிடுவோம்...!!

சாலையில் வேகமாய் செல்ல மாட்டோம்...!
வாழ்வினில் சோகம் அடைய மாட்டோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



No comments:

Post a Comment