Friday, January 24, 2020

சாலை பாதுகாப்பு - 5) ஒளி

ஒளி - Light

உண்மை

கண்கூசும் விளக்கின் ஒளி...!
கல்லறைக்கு செல்லும் வழி...!!

கண்ணைக் கூசும் அளவுக்கு ஒளி...!
கண்ணிமை நேரத்தில் விபத்துக்கு வழி...!!

அதிகளவு ஒளி உமிழும் பல்புகள்...!
அதனால் பல உயிர் இழப்புகள்...!!


உபதேசம்

ஓட்டாதீர்...! ஓட்டாதீர்...!
கண்கூசும் விளக்கொளியில் வாகனம் ஓட்டாதீர்...!!

ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்...!
ஒழுக்கத்தை என்றும் கடைப்பிடிப்பீர்...!!

இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்...!
அதனால் வாழ்நாள் நீட்டிப்பீர்...!!


உறுதிமொழி

ஓட்ட மாட்டோம்...! ஓட்ட மாட்டோம்...!
கண்கூசும் விளக்கொளியில் வாகனம் ஓட்ட மாட்டோம்...!!

ஒற்றை விளக்குடன் ஓட்ட மாட்டோம்...!
ஒழுக்கத்தை என்றும் கடைப் பிடிப்போம்...!!

இரவில் வெளிச்சத்தை தாழ்த்திடுவோம்...!
அதனால் வாழ்நாள் நீட்டித்திடுவோம்...!!


- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu



No comments:

Post a Comment