மண்ணில் மகத்தானது
மனித உயிர்.
மனித உயிர்கள்
மடிவது
பல வகையில்.
என்றாலும்
வாழ்வாங்கு வாழ்ந்து
வயது முதிர்வில்
இறப்பது
இயற்கை. நிலை.
இயற்கையான
இறப்பு தவிர்த்து
ஆறாம் அறிவான
பகுத்தறிவால்
பாதுகாத்திட வேண்டிய
தனது உயிரை
இன்றைய மனிதன்
பாதுகாப்பற்ற
பயணத்தால்
அற்ப ஆயுளில்
பலரும் பரிதவிக்க
பரிதாபமாய் இறந்து
பறக்கிறான்
புவியை விட்டு.
இனி கூடாது
இந்நிலை.
மனிதன்
தன்னிடமே
சாலை –
பயணிக்கவா...?
மரணிக்கவா...??
என
கேள்வி கேட்டு
சாலை பாதுகாப்பு –
வாசகம் அல்ல.
அது
வாழ்க்கை முறை
என்ற
உண்மை உணர்ந்து
உபதேசம் பெற்று
உறுதிமொழி ஏற்றான்
என்றால்
உண்மையில்
உயிரிழப்புகள்
தவிர்க்கப்பட்டு
மண்ணில்
மகிழ்வோடு
விபத்தின்றி வாழ்வான்...!
நல்லதொரு
விடியலைக்
காண்பான்...!!
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment