Tuesday, August 19, 2025

பழமொழி நானூறு - உறவினர்

 

பழமொழி நானூறு
 
உறவினர்
 
(உறவினர் பிரியாமல் பொருந்துதல்)
 
துன்னினார் அல்லார் பிறர்
 
ஒரு குடியில் பிறவாத பிறர் சிறந்தவர் அல்லர்
 
(உறவினர் உறைக்கும் உறுதியைக் கேட்டல்)
 
தாய் மிதித்த ஆகா முடம்
 
தாய் மிதித்தன முடம் ஆகாது
 
(உறவினர் செய்வதை உற்றார் செய்க)
 
துன்னூசி போம் வழி போகும் இழை
 
தையல் ஊசி போகின்ற வழியே இழையும் போகும்
 
(நெடுநாள் சேர்ந்துறைதலால் நேரும் துன்பம்)
 
திருவொடும் இன்னாது துச்சு
 
இலக்குமியோடாயினும் நெடுநாள் சேர்ந்துறைதல்
துன்பம் தருவதாம்
 
(சுற்றத்தாரோடு சூதாடல் ஆகாது)
 
காதலோடு ஆடார் கவறு
 
உற்றாரோடு சூதாட்டம் ஆட மாட்டார்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





பழமொழி நானூறு - உறவினர்

 

பழமொழி நானூறு
 
உறவினர்
 
(அநுதாபம் இல்லாதவர் உறவு)
 
உமிக் குற்றுக் கை வருந்துமாறு
 
உமியைக் குற்றுவதால் கை வலித்தல்போலும்
 
(வறுமையை உறவினர் தீராவிடத்துச் செய்யத்தக்கது)
 
எல்லாம் பொய் அட்டூணே வாய்
 
யாவரும் உண்ணும் உணவிற்கு அவசியமானவற்றைச்
செய்வது மெய்; மற்றெல்லாம் பொய்.
 
(சுற்றத்தார் இலக்கணம்)
 
மனை மரம் ஆய மருந்து
 
மனையின்கண் நின்ற மருந்து மரத்தைப் போன்றது
 
(உதவுவோர் உறவினரே)
 
பெய்யுமாம் பெய்யாது எனினும் மழை
 
மழை பருவத்தில் பெய்தது இல்லையாயினும்
பின்னையும் பெய்யும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





Sunday, August 17, 2025

பழமொழி நானூறு - இல்வாழ்க்கை

 

பழமொழி நானூறு
 
இல்வாழ்க்கை
 
(அருள் புரியாது உயிர்ப்பலி கொடுத்தல்)
 
தயிர் சிதைத்து மற்றொன்று அடல்
 
தயிரைச் சிதைத்து மற்றொன்றாக உருக்குதல் போலும்
 
(நன்மை செய்தவர்க்கு உறுதி சூழ்தல்)
 
நீர் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் இல்
 
கடல் நடுவே சென்றாலும்
ஒன்றுக்கு இரண்டாகப் பயன்தரும் வாணிகம் ஏதுமில்லை
 
(நன்மை செய்தவர் காயினும் அவரைக் காயாமை)
 
யாரே நம நெய்யை நக்குபவர்
 
 தெய்வத்தின் மீதான அபிசேக நெய்யை நக்குவார் யார்
 
(உபகாரத்துக்கு அபகாரம்)
 
தாம் இருந்த கோடு குறைத்து விடல்
 
தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையை வெட்டியதோடொக்கும்
 
(நன்மை செய்தவரைப் புறங்கூறுதல்)
 
உண்ட இல் தீ இடுமாறு
 
உணவிட்டவர் வீட்டிலே தீ வைப்பது போலாம்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai