பழமொழி நானூறு - கீழ்மக்கள் இயல்பு
பழமொழி
நானூறு
கீழ்மக்கள் இயல்பு
(இனநலம் பெற்றும் மனநலம் பெறாமை)
என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்
கீழ்மக்கள்
எக்காலத்தும் மனத்தால் நல்லவராகமாட்டார்
(பெரியரோடு சேர்ந்தாலும் பெரியராகாமை)
தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்
சர்க்கரையோடு
சேர்ந்த மணலைத் தின்னலாமோ?
(பெரியார் செய்வன சிறியார் செய்யலாகாமை)
ஆகுமோ நந்து உழுத எல்லாம் கணக்கு
நத்தை
உழுததெல்லாம் கணக்கு ஆகுமோ?
(உரைத்தாலும் உணர்வு தோன்றாமை)
பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு
அறிவில்லாதார்க்கு பலவிதமாகப் பொருளை விளக்கினாலும்
அப்பொருளை
அறியும் உணர்வு உண்டாகாது
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment