Friday, August 15, 2025

பழமொழி நானூறு - மன்னரைச் சேர்ந்தொழுகல்

 

பழமொழி நானூறு
 
மன்னரைச் சேர்ந்தொழுகல்
 
(பேரரசரை அடைந்தவர் பிறரை அஞ்சார்)
 
கூரிது எருத்து வலியதன் கொம்பு
 
வலிய எருதின் கொம்பு கூரியதாயிருக்கும்
 
(மன்னன் மதித்தவனை மாந்தரும் மதிப்பர்)
 
நெய் பெய்த கலனே நெய் பெய்துவிடும்
 
முன்னே நெய்யிட்ட கலமே பின்னும் நெய்யிட்டு வரும்
 
(அரசனை அடைந்தவர் ஒன்றும் வேண்டாமை)
 
வேண்டாமை வேண்டியது எல்லாம் தரும்
 
ஒன்றனை வேண்டாது ஒழுகுதல்
தாம் வேண்டிய பொருள் எல்லாவற்றையும் தரும்
 
(சேவகரால் காரியங்கொள்வது செவ்விதன்று)
 
முலையிருப்பத் தாய் அணல் தான் சுவைத்தற்று
 
மடியிருக்க
தாயின் அணலைக் கன்று சுவைப்பது போலும்
 
(காலம் அறிந்து சொல்வோர்க்குக் கருமம் முடிதல்)
 
புறத்து அமைச்சின் நன்று அகத்துக் கூன்
 
புறத்தே ஒழுகும் அமைச்சரைக் காட்டிலும்
அகத்தே வாழும் கூனே நன்று
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment