Saturday, August 23, 2025

பழமொழி நானூறு - அறம் செய்தல்

 

பழமொழி நானூறு
 
அறம் செய்தல்
 
(செல்வர் அறம் செய்து அருளுடையர் ஆகுதல்)
 
சுமையொடு மேல்வைப்பாமாறு
 
பொன்னாகிய சுமையின்மேல் அதற்கு மேற்பாரமாக
மாணிக்கத்தை வைத்துப் போவதைப் போலும்
 
(செய்த அறமே எய்ப்பினில் வைப்பாம்)
 
எய்ப்பினில் வைப்பு என்பது
 
தாம் தளர்ந்த காலத்துத்
தமக்கு உதவும் நிதியென்று சொல்லப்படுவது
 
(அறத்தால் மறுமை இன்பம் பெறுதல்)
 
பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல்
 
கரும்பு இப்பொழுது தின்பதுமல்லாமல்
பின்னர் உண்பதற்கும் பாகாகக் காய்ச்சியதோடொக்கும்
 
(அறம் இம்மைப் புகழும் மறுமை இன்பமும் தரும்)
 
வேள்வாய் கவட்டை நெறி இரண்டுலகம்
 
இரண்டுலகமும்
கவட்டை நெறியில் உளவாகிய கல்யாணங்கள் போலும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment