Sunday, August 3, 2025

பழமொழி நானூறு - கீழ்மக்கள் இயல்பு

 

பழமொழி நானூறு
 
கீழ்மக்கள் இயல்பு
 
(கொண்டது விடாமை)
 
ஆகாதே உண்டது நீலம் பிறிது
 
நீல நிறத்தை உண்ட பொருள் வேறு நிறம் ஆகாது
 
(இயற்கை மாறாமை)
 
கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு
 
தேவரே தின்றாராயினும் வேம்பானது கசக்கும்
 
(தீயொழுக்கம் திருந்தாமை)
 
குறும்பூழ்க்குச் செய் உளதாகும் மனம்
 
காடைக்கு மனமானது
வயலில் வசிப்பதிலேயே பொருந்தியிருக்கும்
 
(பழியஞ்சாமை)
 
அஞ்சாதே தின்பது அழுவதன் கண்
 
இறையாகத் தின்கின்ற பிராணியின் துன்பத்தைக் கண்டு
அந்தப் பிராணியைத் தின்னாமல் விடாது
 
(பழியில் மிக்கெழுதல்)
 
அகலுள் நீராலே துடும்பல் எறிந்துவிடல்
 
துறை நீரிலே உடம்பு சுத்தம் பெறுவதற்குக் குளித்துத்
திளைத்தனோடொக்கும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment