பழமொழி நானூறு - அரசியல்பு
பழமொழி
நானூறு
அரசியல்பு
(நிலுவை வைக்காமல் வரி தண்டுதல்)
பால் தலைப் பால் ஊரல் இல்
பாலைச் சேரக்
கறக்கலாமென்று கறவாதுவிட்டால்
பின்னர்
அதிகமாகப் பால் சுரத்தல் இல்லை
(அதிகப்படி வரிகொண்டு அளிசெய்தல்)
சூடு அறுத்து வாயில் இடல்
கோழியின்
இறைச்சியை அறுத்து அக்கோழிக்கே
இறையாக
இடுதல் போலும்
(கொடுங்கோலுக்குக் குடிகள் செய்யும் பரிகாரம் இல்லை)
இல்லையே
யானை தொடு உண்ணின்
மூடும்
கலம்
கலத்திலிருப்பதை
யானை உருட்டி உண்ணலுற்றால் அதனை
உண்ணாதபடி மூடத் தக்க கலம் வேறில்லை
(பகைவரை அடாதவரும் நீதி தவறினவரும் எளியராவர்)
எளியாரை எள்ளாதார் இல்
எளியாரை
இகழாதவர் இல்லை
(பகைவரை வெல்லும் படை அரசனுடைய அன்பே)
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்
ஆயிரம்
காக்கையை ஓட்டுதற்கு ஒரு கல் போதுமன்றோ?
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment