Monday, August 11, 2025

பழமொழி நானூறு - பொருளைப் போற்றுதல்

 

பழமொழி நானூறு
 
பொருளைப் போற்றுதல்
 
(கீழ்மக்களிடம் வைத்த பொருள் தமக்குப் பயன்படாது)
 
மூரியைத் தீற்றிய புல்
 
கிழஎருதுக்கு உண்பித்த புல்லோடொக்கும்
 
(கைவிட்ட பொருளைத் தேடிக்கொள்ளுதல் முடியாது)
 
வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு
 
வெண்ணையைத் தலையின்மேல் வைத்து (உருகிக் கண்ணில்
விழும்பொழுது) மயிலைப் பிடிக்கிறதுபோல்
 
(கடன் கொடாமை)
 
கடம் பெற்றான் பெற்றான் குடம்
 
கடன் கொடுத்தவன் பெறுவது (பிரமாணம் செய்வதற்குப்)
பாம்புக் குடமேயன்றி வேறொன்றும் இல்லை
 
(கொடுத்த கடன் கேட்டால் கைப்பாதல்)
 
கொண்டார் வெகுடல் நகை
மேலும் கைப்பு ஆய்விடும்
 
கடன் வாங்கினவர் கோபித்தல் விளையாட்டாகச்
செய்தவிடத்தும் துன்பம் தருவதாய்விடும்
 
õõõ
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment